2026ம் ஆண்டு நடைபெறவுள்ள தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய், மாநிலம் முழுவதும் பிரசார சுற்றுப்பயணத்தில் ஈடுபட்டு வருகிறார்.
கடந்த 13ம் தேதி தொடங்கிய இந்த பரப்புரைப் பயணம் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், இதில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆரம்பத்தில் டிசம்பர் 13ம் தேதி சேலம், நாமக்கல் மாவட்டங்களில் பிரசாரம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருந்தது.
மேலும், வரும் 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். இந்நிலையில், வரும் 27ம் தேதி அன்று சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம செய்ய உள்ளதாக விஜய் அறிவித்துள்ளார்.
