நாம் தமிழர் கட்சியின் முன்னாள் முக்கிய உறுப்பினரான காளியம்மாள், அந்தக் கட்சியில் இருந்து சமீபத்தில் வெளியேறியதற்குப் பின்னர், அடுத்ததாக அவர் எந்த கட்சியில் இணைகிறார் என்பது குறித்து தமிழக அரசியல் வட்டாரங்களில் பரபரப்பு நிலவி வந்தது.

இந்நிலையில், இன்று காலை 11 மணிக்கு நாகை மாவட்டத்தில் நடைபெறும் தவெக தலைவரும், தமிழ் சினிமாவின் பிரபல நடிகருமான விஜய் தலைமையில் நடைபெறும் பரப்புரை நிகழ்வில், காளியம்மாள் தவெகவில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்படவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

அவரது இந்த முடிவு உறுதி செய்யப்படும்போது, 2026 சட்டமன்றத் தேர்தலை மையமாகக் கொண்டு, நாகை தொகுதியை நோக்கி அவர் வேட்பாளராக நிறுத்தப்பட வாய்ப்பு அதிகம் என சொல்லப்படுகிறது.

நாம் தமிழர் கட்சியில் இருந்து விலகியதற்குப் பின்னர், தனிப்பட்டபல கட்சிகளின்  கவனத்தையும், சமூக ஊடக ஆதரவும் பெற்றுள்ள காளியம்மாளின் தவெகவில் இணைவு, அந்த கட்சிக்கு முக்கிய அரசியல் நம்பிக்கையாக விளங்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கருதுகின்றனர். இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு, இன்று நடைபெறும் பரப்புரை கூட்டத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.