
தமிழக முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று அமைச்சரவை கூட்டம் நடைபெற்றது. அப்போது முதல்வர் ஸ்டாலின் ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதாவது தமிழகத்தில் புறம்போக்கு நிலத்தில் வசிக்கும் 86000 பேருக்கு பட்டா வழங்குவதற்கு ஒப்புதல் வழங்கியுள்ளார்.
அதன்படி அடுத்த மாதம் சென்னையில் 20 ஆயிரம் பேர் உட்பட மாநிலம் முழுவதும் 86000 பேருக்கு வீட்டுமனை பட்டா வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது. மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு ஆகிய பகுதிகளில் ஆங்கிலேயர் காலத்தில் இருந்த சர்க்கார் பட்டா என்பதை மாற்றவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.