
தமிழகத்தில் இன்று மிக கனமழை பெய்யும் என்பதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்களுக்கு விடுமுறை வழங்கி மாவட்ட ஆட்சியர்கள் உத்தரவிட்டிருந்தனர். இதைத்தொடர்ந்து நாளையும் இந்த மாவட்டங்களுக்கு மிக கனமழை எதிரொலியாக விடுமுறை வழங்கப்பட்டுள்ளது. அதேபோன்று தற்போது நாளை அரசு அலுவலகங்களுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
அதன்படி நாளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்களுக்கும் விடுமுறை வழங்கி அரசு அறிவித்துள்ள நிலையில் வழக்கம்போல் வணிக நிறுவனங்கள் மற்றும் கடைகள் செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நாளை புதுச்சேரியிலும் பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. நாளை மேற்கண்ட மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கதாகும்.