சென்னை மாவட்டம் குன்றத்துறை சேர்ந்தவர் அபிராமி. இவருக்கும் பிரியாணி கடையில் வேலை பார்க்கும் சுந்தரம் என்பவருக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியது. இருவரும் அடிப்படை உல்லாசமாக இருந்துள்ளனர். இதனை அறிந்த அபிராமியின் கணவர் விஜய் தனது மனைவியை கண்டித்துள்ளார்.
இதனால் சுந்தரத்துடன் பழகுவதற்கு இரண்டு குழந்தைகள் தான் தடையாக இருப்பதாக எண்ணிய அபிராமி கள்ளக்காதலனுடன் கூறி தூக்க மாத்திரை வாங்கி வருமாறு கூறியுள்ளார். இதனையடுத்து குழந்தைகளுக்கு பாலில் தூக்க மாத்திரை கலந்து கொடுத்து குழந்தைகளின் கழுத்தை நெரித்து கொலை செய்தார்.
நாட்டையே உலுக்கிய இந்த வழக்கில் பரபரப்பு தீர்ப்பு வெளியாகி உள்ளது. இந்த வழக்கினை விசாரித்த காஞ்சிபுரம் மகளிர் நீதிமன்றம் அபிராமியும் மீனாட்சிசுந்தரமும் குற்றவாளி என தீர்ப்பு வழங்கியுள்ளது. இருவருக்கும் சாகும் வரை ஆயுள் தண்டனை வழங்கி நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
