இந்தியர்கள் பெரிதும் நம்பும் போக்குவரத்து முறையாக ரயில்பயணம் உள்ளது. இதன் ஒரு பகுதியாக, முன்பதிவு செய்த பயண தேதியில் மாற்றம் செய்ய வேண்டுமானால், தற்போது டிக்கெட்டை ரத்து செய்து புதிய டிக்கெட் எடுக்கும் நிலைமை நிலவுகிறது. இதனால் பயணிகள் மனஅழுத்தம் மற்றும் கூடுதல் செலவுகளை சந்தித்து வருகின்றனர்.
இந்த நடைமுறையை முற்றிலும் மாற்றும் வகையில், வரும் ஜனவரி மாதம் முதல், பயண தேதி மாற்ற வசதி ஆன்லைனில் அறிமுகமாக இருக்கிறது. இது தொடர்பாக, ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் கூறுகையில், “பயண தேதியை மாற்றும் புதிய வசதியின் மூலம், பயணிகள் டிக்கெட்டை ரத்து செய்ய தேவையின்றி, ஆன்லைனில் நேரடியாக தேதியை மாற்றிக்கொள்ளலாம்.
இதற்கான எந்த கட்டணமும் வசூலிக்கப்படாது” எனத் தெரிவித்தார். இந்த புதிய தீர்வு கோடிக்கணக்கான பயணிகளுக்கு நேரத்தில் பயண திட்டங்களை மாற்றும் உத்தரவாதம் வழங்கும் வகையில் பெரும் நிவாரணமாக அமைந்துள்ளது.
