இமாச்சலப் பிரதேசத்தின் பிலாஸ்பூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் கனமழையால் ஏற்பட்ட நிலச்சரிவில் தனியார் பேருந்து ஒன்று சிக்கி பரிதாபமாக 18 பேர் உயிரிழந்தது பெரும் சோகத்தைக் ஏற்படுத்தியுள்ளது.
தொடர்ந்து பெய்துவரும் பருவமழையால் மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ள நிலையில், நேற்று நிகழ்ந்த இந்த சம்பவம் பொதுமக்களிடையே பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. பேருந்தில் பயணித்திருந்த ஏராளமானோர் நிலச்சரிவின் போது மண்ணுக்குள் புதைந்து விட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
விபத்து நடந்த உடனே மீட்புப் படையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று மீட்பு பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி சார்பில் தலா ரூ.2 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இச்சம்பவம் தொடர்பாக மாநில அரசு மற்றும் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் மத்திய இணைப்புடன் தொடர்ந்து மீட்புப் பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
