சூடான் நாட்டில் அதிகாரத்தை கைப்பற்றுவதில் நாட்டு ராணுவத்திற்கும் துணை ராணுவத்திற்கும் இடையே கடுமையான போர் நடைபெற்று வருகிறது. துப்பாக்கி சூடு மற்றும் குண்டு வெடிப்புகள் போன்றவற்றால் ஏராளமான பொதுமக்கள் உயிரிழந்துள்ளனர். சூடான் நாட்டில் தொடர்ந்து பதற்றம் நீடிப்பதால் தற்போது அங்கு வேலை நிமித்தமாக தங்கி இருக்கும் இந்தியர்களை மீட்பதற்கு ஆப்ரேஷன் காவேரி என்ற திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆப்ரேஷன் காவிரி திட்டத்தின் மூலமாக முதல் கட்டமாக இன்று 5 தமிழர்கள் இரவு 10:30 மணி அளவில் டெல்லி விமான நிலையத்திற்கு வருகிறார்கள். மேலும் தொடர்ந்து சூடானில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை மீட்கும் முயற்சியில் மத்திய அரசு ஈடுபட்டுள்ளது.