அமெரிக்க நாட்டில் முதல் முறையாக இந்திய வம்சாவளியை சேர்ந்த சீக்கிய பெண் நீதிபதியாக பதவியேற்றிருக்கிறார்.

அமெரிக்க நாட்டில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று டெக்சாஸ் மாகாணத்தில் இருக்கும் ஹாரிஸ் கவுண்டி சிவில் நீதிமன்றத்தின் நீதிபதியாக இந்திய வம்சாவளியினரான மன்பிரீத் மோனிகா சிங் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார். மோனிகா ஹூஸ்டன் நகரத்தில் பிறந்திருக்கிறார். தற்போது, குடும்பத்தினருடன் பெல்லாயரில் வாழ்ந்து வருகிறார்.

மோனிகா 20 வருடங்களாக வழக்கறிஞராக பணிபுரிந்திருக்கிறார். இந்நிலையில், நீதிபதியாக பதவியேற்றிருக்கும் அவர், ஹூஸ்டன் நகரை பிரதிநிதித்துவப்படுத்துவதில் மகிழ்ச்சிக்கொள்கிறேன் என்று கூறியிருக்கிறார். அந்நகரத்தின் மேயரான சில்வெஸ்டர் டர்னர் சீக்கிய சமூகத்திற்கே இது பெருமையான நாளாக இருக்கிறது என்று கூறியுள்ளார்.