திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழனி சண்முகபுரத்தில் மீன்வளத் துறைக்கு சொந்தமான மீன் விற்பனை கடை அமைந்துள்ளது. அந்த கடை பல மாதங்களாக செயல்படாமல் இருப்பதால் பழனி பாண்டியன் நகரில் வசிக்கும் கமர்தீன் என்பவர் தனது சரக்கு வேனை அங்கு நிறுத்தி வைத்துள்ளார். ஏற்றுமதியம் சரக்கு வேன் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது. மேலும் அருகில் இருந்த மீன் விற்பனை கடையிலும் தீ வேகமாக பரவியது.

இதனை பார்த்த பொதுமக்கள் தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். அதன்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் சரக்கு வேனும், கடையும் எரிந்து நாசமானது. இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.