திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள விளாம்பட்டி பகுதியில் விருமாண்டி(50) என்பவர் வசித்து வருகிறார். இவர் விளாம்பட்டி பகுதியில் இருந்து வைகோலை ஏற்றி கொண்டு கரியாம்பட்டி நோக்கி சரக்கு வேனில் சென்றுள்ளார். அங்கு வைக்கோல் கட்டுகளை இயக்கி வைத்துவிட்டு மீண்டும் விருமாண்டி நிலக்கோட்டை நோக்கி வந்து கொண்டிருந்தார். இந்நிலையில் திரவியம் நகர் பகுதியில் வைத்து விருமாண்டி சாலையோரம் வாகனத்தை நிறுத்திவிட்டு குடிநீர் குழாயில் தண்ணீர் குடித்துக் கொண்டிருந்தார்.

அப்போது எதிர்பாராதவிதமாக சரக்கு வாகனத்தில் தீப்பிடித்து எரிந்தது. இதனை பார்த்து அதிர்ச்சியடைந்த விருமாண்டி அக்கம் பக்கத்தினரின் உதவியுடன் தீயை அணைக்க முயன்றார். ஆனால் தீயை அணைக்க இயலவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 1/2 மணி நேரம் போராடி வாகனத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் சரக்கு வாகனம் முழுவதும் எரிந்து நாசமானது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.