விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள தி.புதுப்பாளையம் கிராமத்தில் துரை என்பவர் வசித்து வருகிறார். இவர் அண்ராயநல்லூர் பகுதியில் இருக்கும் சந்தை தோப்பு அருகே இயக்க நிலத்தில் கரும்பு சாகுபடி செய்துள்ளார். நேற்று மாலை மின்கசிவு காரணமாக கரும்பு தோட்டத்தில் திடீரென தீப்பிடித்து எரிய ஆரம்பித்தது.

இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு சென்று 2 மணி நேரம் போராட்டத்திற்கு பிறகு கரும்பு தோட்டத்தில் பற்றி எரிந்த தீயை அணைத்தனர். ஆனால் இந்த தீ விபத்தில் 50 சென்ட் மதிப்புள்ளான கரும்பு தோட்டம் எரிந்து நாசமானது. இதுகுறித்து போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.