கேரள மாநிலம் திருச்சூர் மாவட்டத்தில் இரு இளைஞர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த தகராறு ஒருவரை கத்தியால் சரமாரியாக குத்தியுள்ளனர். இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி வருகின்றது. இதில் தவளைகுளம் பகுதியை சேர்ந்த இளைஞர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த மற்றொரு இளைஞருடன் இவருக்கு வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

பின்னர் வாக்குவாதம் முற்றிய நிலையில் இருவரும் சண்டை இட்டுள்ளனர். மேலும் ஒருவரை ஒருவர் கத்தியால் குத்திக் கொள்ளவும் முயற்சி செய்துள்ளனர். தற்போது இந்த வீடியோ சமூக வலைதளத்தில் வைரலாகி பொதுமக்கள் இடையே அதிர்ச்சியையும் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது.