
இந்தி சினிமாவில் பிரபலமான பாடலாசிரியர் மற்றும் கவிஞராக இருப்பவர் ஜாவேத் அக்தர். மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்தவ இவர் சமீபத்தில் மூத்த அரசியல் தலைவர் மற்றும் உச்ச நீதிமன்ற வழக்குரைநரான கபில் சிபலுடன் நேர்காணலில் பேசி இருந்தார்.
அதில் அவர் பேசியதாவது, “திரைத்துறையில் உள்ள பல நடிகர், நடிகைகள் அமைதி காத்து வருவதை நம்மால் பார்க்க முடிகிறது. இதற்கான காரணம் அவர்கள் ரெய்டு நடவடிக்கைக்கு பயப்படுவது தான். அதனால்தான் கருத்து தெரிவிக்க தயங்குகிறார்கள். ஒருவேளை ஏதாவது கருத்து தெரிவித்தால் அமலாக்கத்துறை, வருமானவரித்துறை மற்றும் சிபிஐ போன்ற அமைப்புகளின் விசாரணை நடவடிக்கைகள் தங்கள் மீது திரும்புமோ என்ற பயம் அவர்களது மனதில் பதிந்துள்ளது.
நமது நாட்டில் அனைவரிடமும் அச்சம் காணப்படுவதால் தங்கள் மீது நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு விசாரணை நடத்தப்படலாம் என்ற எண்ணம் எழுகிறது. எனவே பாலிவுட் பிரபலங்கள் என்னதான் பிரபலமாக இருந்தாலும் அவர்களும் சாதாரண மக்கள் போலவே சமூகத்தில் வாழ்ந்து வருகிறார்கள். இதனால் அவர்களும் பாதிப்பை சந்திக்க நேரிடும். திரை துறையில் மட்டுமல்லாமல் நாடு முழுவதும் இந்த அச்சம் காணப்படுகிறது” என்று கூறினார்.