காஞ்சிபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக மிக்சாம் புயல் காரணமாக கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள நீர்நிலைகள் நிரம்பி உபரி நீர் வெளியேறி வருகிறது. இந்நிலையில் அறுவடைக்கு தயார் நிலையில் இருந்தால் நெற்பயிர்கள் மழை நீரில் மூழ்கி விவசாயிகள் நஷ்டம் அடைந்தனர். சுமார் 2000 ஏக்கர் நெற்பயிர்கள் தண்ணீரில் மூழ்கி நாசமானது.

இதனையடுத்து காய்கறி செடிகளும் மழையால் சேதம் அடைந்தது. எனவே வேளாண் துறை மூலம் கணக்கெடுப்பு நடத்தி நெற்பயிர் சேதத்திற்கு ஏக்கருக்கு 40 ஆயிரம் ரூபாய், காய்கறி பயிர்களுக்கு ஏக்கருக்கு 50 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.