வேலூர் மாவட்டத்தில் உள்ள அத்தி கொல்லை பகுதியில் நிவேதிதா என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வேலூர் சிஎம்சி மருத்துவமனை உணவகத்தில் வேலை பார்த்து வந்துள்ளார். கடந்த 2019-ஆம் ஆண்டு புது வசூர் கல்குவாரியில் நிவேதிதா சடலமாக மீட்கப்பட்டார். இதுகுறித்து வழக்குபதிவு செய்த போலீசார் நடத்திய விசாரணையில் வேலூர் ரங்கபுரம் பகுதியைச் சேர்ந்த ஆட்டோ ஓட்டுநர்களான பிரகாஷ், நவீன் குமார் ஆகியோர்நிவேதிதாவை கொலை செய்தது தெரியவந்தது. வேலைக்கு ஆட்டோவில் சென்று வந்த போது பிரகாஷுடன் நிவேதிதாவுக்கு பழக்கம் ஏற்பட்டது.

இதனையடுத்து தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு நிவேதிதா பிரகாஷிடம் கூறியுள்ளார். ஆனால் அதற்கு மறுப்பு தெரிவித்து பிரகாஷ் நவீன் குமாருடன் இணைந்து கல்குவாரிக்கு நிவேதிதாவை அழைத்துச் சென்று கீழே தள்ளிவிட்டு கொலை செய்தது தெரியவந்தது. இந்த வழக்கினை விசாரித்த நீதிமன்றம் பிரகாசுக்கு ஆயுள் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும், நவீன்குமார் 2 ஆண்டுகள் ஜெயில் தண்டனையும், ஆயிரம் ரூபாய் அபராதமும் விதித்து உத்தரவிட்டது.