சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வரும் வீடியோ ஒன்று அனைவரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. அதில் ஒரு விவசாயி தனது புத்தம் புதிய மெர்சிடஸ் ஜி-வேகன் காரை வாங்கும் காட்சி காணப்படுகிறது. ரூ.3 கோடி மதிப்புள்ள இந்த ஆடம்பர காரை வாங்கிய விவசாயி, தனது பாரம்பரிய உடையான வேட்டி, குர்தா அணிந்து, எளிமையோடு ஷோரூமுக்கு வந்து அனைவரின் கவனத்தையும் கவர்ந்தார்.

https://www.instagram.com/reel/DP05NimCS-x/?igsh=MWdhbWN6NXpqenlkOA==

வீடியோவில், விவசாயி தனது குடும்பத்துடன் ஷோரூமுக்குள் நுழைந்து, மூடியிருந்த புதிய காரை திறக்கிறார். அப்போது அவரது மனைவி காருக்கு பொட்டு வைத்து, ஆரத்தி எடுத்து வழிபடுகிறார். பின்னர் விவசாயி காரின் கதவைத் திறந்து அமர்ந்து, சிறு பிரார்த்தனை செய்து, அதன் வசதிகளையும், சிறப்பம்சங்களையும் ஆராய்கிறார். அந்த தருணத்தில் அவரது முகத்தில் திருப்தியும் பெருமையும் கலந்த புன்னகை அனைவரையும் கவர்கிறது.

பின்னர் காரை இயக்கி நம்பிக்கையுடன் ஷோரூமிலிருந்து வெளியேறும் விவசாயின் காட்சி இணையத்தில் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. “மண்ணில் உழைத்தவன் உலகத்தையும் மிஞ்சலாம்” எனக் கூறி பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். எளிமை மற்றும் வெற்றியின் சிறந்த உதாரணமாக இந்த விவசாயி தற்போது சமூக வலைதளங்களில் நாயகனாக மாறியுள்ளார்.