நடிகர் சூரி பதிவிட்ட செல்ஃபீ பதிவிற்கு பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

சூரி என்றாலே முதலில் பரோட்டா தான் ஞாபகத்தில் வந்து சென்றது. அதற்கு காரணம் அவருடைய புரோட்டா காமெடி தான். ஆனால் தற்போது சூரி என்றாலே அசத்தலான நடிகன் என்று நினைவிற்கு வரும் அளவிற்கு அவருடைய விடுதலை படம்  கெரியர் பெஸ்ட் படமாக அவருக்கு அமைந்துள்ளது.

விடுதலையின் வெற்றிக்கு பின் நல்ல கதை மற்றும் கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடிப்பதில் சூரி கவனம் செலுத்த வேண்டும் என அவருடைய ரசிகர்கள் மற்றும் நலம் விரும்பிகள் பலரும் தங்களது கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

இந்நிலையில் பெரும்பாலும் தனது படம் சார்ந்த பதிவுகளை மட்டுமே தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டு வந்த சூரி தற்போது “நலம் சூழ்க” என கார் ஒன்றில்  அமர்ந்தபடி அவருடைய செல்ஃபி புகைப்படம் ஒன்றை ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், அவருக்கு பின்னால் ரோல்ஸ் ராய்ஸ் காரின் லோகோ இடம் பெற்றிருந்ததை பார்த்து நடிகர் சூரி ரோல்ஸ் ராய்ஸ் கார் வாங்கி விட்டதாக எண்ணி அவரது ரசிகர்கள் அவருக்கு பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர்.