தமிழ் சினிமாவில் பிரபலமான வில்லன் நடிகராக வலம் வருபவர் ஜான் கொக்கேன். இவர் நடிகர் அஜித் நடித்த துணிவு மற்றும் ஆர்யா நடித்த சார்பட்டா பரம்பரை போன்ற படங்களில் வில்லன் வேடத்தில் நடித்து அசத்தியுள்ளார். இந்நிலையில் நடிகர் ஜான் கொக்கேனின் மனைவி பூஜா இராமச்சந்திரன் கர்ப்பமாக இருந்த நிலையில் அத்தம்பதிகளுக்கு தற்போது ஆண் குழந்தை பிறந்துள்ளது.

இந்த தகவலை இருவரும் மகிழ்ச்சியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அறிவித்துள்ளனர். மேலும் தங்களுடைய ஆண் குழந்தைக்கு கியான் கொக்கேன் என பெயர் வைத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளனர். இந்த தம்பதிகளுக்கு தற்போது சோசியல் மீடியாவில் வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

 

 

View this post on Instagram

 

A post shared by John Kokken (@highonkokken)