மலையாள சினிமாவில் பிரபலமான நடிகையாக இருப்பவர் மஞ்சிமா மோகன். இவர் தமிழில் சிம்பு நடித்த அச்சம் என்பது மடமையடா என்ற திரைப்படத்தின் மூலம் நடிகையாக அறிமுகமானார். தன் முதல் படத்திலேயே ஏராளமான ரசிகர்களை கவர்ந்த மஞ்சிமா மோகனுக்கு அடுத்தடுத்து தமிழில்  பட வாய்ப்புகள் குவிந்தது. இந்த படத்தைத் தொடர்ந்து நடிகை மஞ்சிமா மோகன் சத்ரியன், இப்படை வெல்லும், தேவராட்டம், துக்ளக் தர்பார், களத்தில் சந்திப்போம் மற்றும் எஃப்ஐஆர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.

நடிகை மஞ்சிமா மோகன் தேவராட்டம் படத்தில் நடித்த போது நடிகர் கௌதம் கார்த்திக்குடன் காதலில் விழுந்தார். கடந்த 3 வருடங்களாக காதலித்து வந்த மஞ்சிமா மோகன் மற்றும் கௌதம் கார்த்திக் கடந்த வருடம் நவம்பர் மாதம் 28-ஆம் தேதி பெற்றோர்கள் சம்மதத்துடன் திருமணம் செய்து கொண்டனர். இந்நிலையில் நடிகை மஞ்சிமா மோகனுக்கு வருகிற 11-ஆம் தேதி பிறந்தநாள் வர இருக்கிறது. மேலும் நடிகை மஞ்சிமா மோகனுக்கு திருமணத்திற்கு பிறகு வரும் முதல் பிறந்தநாள் என்பதால் இந்த பிறந்தநாள் கண்டிப்பாக அவருக்கு மிகவும் ஸ்பெஷல் ஆக இருக்கும் என்று கூறப்படுகிறது.