மலையாள சினிமா உலகில் சில வருடங்களாக வெற்றி படங்களை கொடுத்து இளம் நடிகராக வளம் வருகின்றார் நடிகர் டொவினா தாமஸ். இவர் நடிப்பில் சென்ற வருடம் தள்ளுமாலா என்ற திரைப்படம் வெளியாகி ஹிட்டானது. தற்போது பல திரைப்படங்களில் நடித்த வருகின்றார். இந்நிலையில் முன்னாள் இந்திய கிரிக்கெட் கேப்டன் தோனியுடன் எடுத்துக்கொண்ட போட்டோவை தனது இணையதள பக்கத்தில் பகிர்ந்திருக்கின்றார்.

இந்த போட்டோ தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வருகின்றது. கிரிக்கெட் வீரர் தோனி கேரளாவிற்கு சென்றிருக்கின்றார். மேலும் அங்கிருக்கும் ரெஸார்ட்டில் தங்கி இருக்கின்றார். அங்கே சென்று தோனியை நடிகர் டொவினோ தாமஸ் சந்தித்துள்ளார். மேலும் இருவரும் சில நிமிடங்கள் கலந்துரையாடியதாகவும் தோனியிடமிருந்து பல விஷயங்களை அறிந்து கொண்டதாகவும் அவரை சந்திக்கும் வாய்ப்பு கிடைத்தது மிகப்பெரிய பாக்கியம் எனவும் அனைவருக்கும் அவர் ஒரு ரோல் மாடல் என்றும் தனது மகிழ்ச்சியை தெரிவித்துள்ளார்.