இலங்கைக்கு எதிரான 2011 உலகக் கோப்பையின் இறுதிப் போட்டியின் போது 2011 உலகக் கோப்பை வென்ற இந்திய கேப்டன் எம்எஸ் தோனி “மிகவும் உறுதுணையாக இருந்தார்” என்று முன்னாள் இந்திய தொடக்க ஆட்டக்காரர் கெளதம் கம்பீர் கூறினார்.

2023 ஆம் ஆண்டு அக்டோபர்-நவம்பர் மாதங்களில் ஒருநாள் உலகக் கோப்பையை இந்தியா நடத்த உள்ளது. இந்த உலகக்கோப்பை நிகழ்ச்சியை இந்தியா மட்டுமே நடத்துவது இதுவே முதல் முறை. இந்தமுறை கோப்பையை கைப்பற்றும் என இந்திய கிரிக்கெட் ரசிகர்கள் ரோஹித் சர்மா & கோ மீது நம்பிக்கை வைத்துள்ளனர்.

2011-ம் ஆண்டு 50 ஓவர் உலகக்கோப்பை போட்டி நடைபெற்றது. வான்கடே மைதானத்தில் நடந்த டைட்டில் மோதலில் இந்திய அணி இலங்கையை சந்தித்தது. 50 ஓவர்களில் மஹேல ஜெயவர்தனவின் சிறப்பான சதத்தில் 6 விக்கெட் இழப்புக்கு 274 ரன்களைகுவித்தது. பின்னர் ஆடிய இந்தியா 2 விக்கெட்டுக்கு 31 ரன்கள் எடுத்திருந்த நிலையில், தொடர்ந்து கோலி 35 ரன்கள் எடுத்து அவுட் ஆன நிலையில், இந்தியா 3 விக்கெட்டுக்கு 114 ரன்கள் எடுத்தது. பின் 4ஆவது விக்கெட்டுக்கு கம்பீர் மற்றும் தோனி இணைந்து ஒரு மறக்கமுடியாத 109 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். கம்பீரின் 97 மற்றும் கேப்டன் தோனியின் 91* ரன்கள் எடுக்க 6 விக்கெட்டுகளை கைவசம் வைத்து 48.2 ஓவரில் 277 ரன்கள் எடுத்து வெற்றிபெற்று இந்தியா கோப்பையை முத்தமிட்டது. கடைசியில் யுவராஜ்சிங் 21 ரன்கள் எடுக்க, தோனி அதை ஸ்டைலாக சிக்ஸருடன் முடித்தார். இந்தியாவின் வெற்றிக்கு கம்பீர் நல்ல துவக்கம் மிக முக்கியமானது. இருப்பினும், இறுதிப் போட்டியில் சதம் அடித்த முதல் இந்தியர் என்ற சாதனையை அவர் 3 ரன்னில்  தவறவிட்டார்.

இந்நிலையில் இந்தியா – இலங்கை அணிகளுக்கு இடையேயான 1வது ஒருநாள் போட்டியின் போது ஸ்டார் ஸ்போர்ட்ஸிடம் பேசிய கம்பீர், தோனி தனது மறக்கமுடியாத ஆட்டத்தின் போது எவ்வளவு உறுதுணையாக இருந்தார் என்பதை நினைவு கூர்ந்தார்.”எம்.எஸ். தோனி எனக்கு 100 ரன்களை எடுக்க வேண்டும் என்று மிகவும் ஆதரவாக இருந்தார். அவர் எப்போதும் நான் சதம் பெற வேண்டும் என்று விரும்பினார். ஓவர்களுக்கு இடையில் அவர் என்னிடம் சொன்னார், ‘உங்கள் சதத்தைப் பெறுங்கள், உங்கள் நேரத்தை எடுத்துக் கொள்ளுங்கள், அதில் அவசரப்பட வேண்டாம். ஏதேனும் தேவை ஏற்பட்டால் நான் அதிரடியாக ஆடுகிறேன் முடியும்’ என்று கூறியதாக கம்பீர் தெரிவித்தார்.

தோனியின் ஊக்கம் இருந்தபோதிலும், கம்பீரால் சதத்தை எட்ட முடியவில்லை. ஆனலும் இந்த பார்ட்னர்ஷிப் தான் 28 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவுக்கு கோப்பையை பெற்றுக்கொடுத்துள்ளது. பொதுவாக எப்போதும் தோனியை விமர்சித்து வரும் கம்பீர் புகழ்ந்து வெளிப்படையாக அன்று நடந்ததை கூறி இருப்பது ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும்,  மகிழ்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த 2023 ஆம் ஆண்டு ரோஹித் & கோ உலக கோப்பையை வெல்லுமா என்பதை காலம் தான் பதில் சொல்லும்…