
இந்தியா பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பாக சமூக வலைதளங்களில் பல்வேறு விதமான வீடியோக்கள் வெளியாகிறது. இதனை பயன்படுத்தி சைபர் குற்றவாளிகள் இந்தியா, பாகிஸ்தான் போர் பற்றி போலி வீடியோ மற்றும் படங்கள் வெளியிடுவது போல லிங்குகளை இணைத்து பதிவிடுகின்றனர். அந்த லிங்குகள் மூலம் திருட்டுகள் நடந்து வருவதால் பொதுமக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் என்று மாநில சைபர் குற்றப் பிரிவு தலைமை கூடுதல் டிஜிபி சந்தீப் மிட்டல் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த அறிக்கையில் இந்தியா, பாகிஸ்தான் தாக்குதல் தொடர்பான போலி வீடியோக்கள், படங்கள் போன்றவற்றை சைபர் குற்றவாளிகள் வலைதளங்களில் பரப்பி வருவதால் அவற்றின் மூலம் பொதுமக்கள் பணம், தகவல்கள் ஆகியவற்றை இழப்பதற்கு வாய்ப்பு உள்ளது. எனவே சந்தேகப்படும் படி வரும் லிங்குகளை பதிவிறக்கம் செய்ய வேண்டாம், அரசு இணையதளங்கள் போல வரும் தகவல்களையும் திறந்து பார்க்க வேண்டாம்.
இதைத் தொடர்ந்து உங்களுக்கு தெரிந்த நபர்களிடம் இருந்து போர் சம்பந்தமான வீடியோ மற்றும் படங்கள் வந்தாலும் அவற்றை தொடக்கூடாது. தங்கள் மொபைலுக்கு வரும் ஓடிபி எண்களை யாரிடமும் பகிர கூடாது. அதோடு ஈமெயில் மூலமாக வரும் லிங்குகளை பதிவிறக்கம் செய்வதை தவிர்க்க வேண்டும் என்று கூறியுள்ளார்.