சென்னையில் உள்ள அண்ணா பல்கலைக்கழகத்தில் பிரபல நடிகர் வடிவேலு மற்றும் இசையமைப்பாளர் தேவா உள்ளிட்ட பல பிரபலங்களுக்கு போலி டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. இந்த போலி டாக்டர் பட்டம் வழங்கும்போது கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கும் அண்ணா பல்கலைக்கழகங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில் போலி டாக்டர் பட்டம் வழங்கிய தனியார் நிறுவனத்தின் இயக்குனர் ராஜு ஹரிஷின் சென்னை உயர்நீதிமன்றத்தில் முன்ஜாமின் கேட்டு மனு தாக்கல் செய்திருந்தார்.
இவருக்கு முன் ஜாமீன் வழங்கக் கூடாது என கோட்டூர்புரம் காவல் துறையினர் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், உயர்நீதிமன்றம் முன் மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. மேலும் ராஜு ஹரிஷின் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்குபவர்களை ஊக்குவிக்கும் விதமாகத்தான் டாக்டர் பட்டம் வழங்கியதாகவும், நிகழ்ச்சி நடத்தியதில் கலந்து கொண்ட சிறப்பு விருந்தினர்கள் மற்றும் அண்ணா பல்கலைக்கழகத்திற்கு அதில் எந்தவித சம்பந்தமும் இல்லை என்றும் கூறியுள்ளார்.