தமிழகத்திலிருந்து வட மாநிலத்தவர்கள் அவர்களுடைய சொந்த மாநிலத்திற்கே திரும்பி செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. குறிப்பாக திருப்பூரில் உள்ள வட மாநில தொழிலாளர்கள் கூட்டம் கூட்டமாக ரயில் நிலையத்தில் இருக்கிறார்களாம். சமீபத்தில் பீகார் மாநில தொழிலாளர்கள் தமிழகத்தில் தாக்கப்படுவதாக போலி தகவல்கள் சமூக வலைதளங்களில் பரவிய நிலையில் அம் மாநில அரசியல் கட்சி தலைவர்கள் கண்டனங்களை தெரிவித்து இருந்தார்கள். ஆனால் அந்த தகவல்களில் எந்த உண்மையும் இல்லை வடமாநில தொழிலாளர்கள் பாதுகாக்கப்படுகிறார்கள் என்று தமிழக காவல்துறை விளக்கம் கொடுத்திருந்தது.

இந்நிலையில் வட மாநில தொழிலாளர்கள் தாக்கப்படுவதாக செய்திகள் வெளிவந்த நிலையில் முதல்வர் ஸ்டாலினுடன் அமைச்சர் சி.வி கணேசன் ஆலோசனை மேற்கொண்டார். அப்போது தமிழகத்தில் புலம்பெயர் தொழிலாளர்களின் உறுதி செய்வதற்கு வேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்க வேண்டும் என முதல்வர் ஸ்டாலின் அறிவுறுத்தியுள்ளார்.