தமிழக முதல்வர் ஸ்டாலின் பிறந்த நாளை முன்னிட்டு கைத்தறி, விசைத்தறி நெசவாளர்களுக்கு ஆயிரம் யூனிட் மின்சாரம் வழங்குவதற்கான அரசாணை வெளியிடப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். கரூர் மாவட்டத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் செந்தில் பாலாஜி கூறியதாவது, தமிழகத்தில் கைத்தறி மற்றும் விசைத்தறி நெசவாளர்களுக்கு மின் கட்டண சலுகை மார்ச் 1-ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்பிறகு தேர்தல் வாக்குறுதியாக சொன்னபடி தற்போது 750 யூனிட்டில் இருந்து ஆயிரம் யூனிட்டாக இலவச மின்சாரம் உயர்த்தப்படுகிறது. கைத்தறி நெசவுக்கு 200 இலவச யூனிட் மின்சாரம் 300 யூனிட் மின்சாரம் ஆக உயர்த்தப்படுகிறது. மேலும் முதல்வர் ஸ்டாலினின் பிறந்த நாளை முன்னிட்டு மார்ச் 1-ம் தேதி இந்த அரசாணை வெளியிடப்பட்டுள்ளது என்று கூறியுள்ளார்.