பொதுவாக தலைவலி, காய்ச்சல் போன்ற உடல் உபாதைகள் ஏற்படும் போது மக்கள் மெடிக்கல் ஷாப் மருந்துகளை வாங்கி சாப்பிட்டு விட்டு அப்போதும் சரியாகவில்லை என்றால் தான் மருத்துவரை அணுகுவது வழக்கம். ஒன்று அல்லது இரண்டு மாத்திரைகளை வாங்கும்போது அட்டையில் காலாவதி தேதியை பார்க்க வாய்ப்பு இல்லை. காலவதியான மருந்துகளை உட்கொண்டால் என்ன ஆகும் என்பதை பற்றி தெரிந்து கொள்வோம்.

காலாவதியான மருந்துகள் நேரடியாக விஷமாக மாறி உயிரைக் கொள்வதில்லை. மாறாக அவற்றின் செயல் திறன் முழுமையாக குறைந்து விடும். உதாரணத்திற்கு வலிப்பு நோய்க்காக எடுக்கப்படும் மருந்து, வலிப்பு நோயை கட்டுப்படுத்தாமல் அதையே அதிகமாக்கி விடவும் வாய்ப்பு உள்ளது. சில மருந்து வகைகள் காலாவதி ஆனாலும் பெரிதாக பிரச்சனை எதையும் ஏற்படுத்துவதில்லை. ஹெட்ராசைன் போன்ற உட்பொருட்கள் உள்ள மருந்துகளில் நிகழும் வேதியல் மாற்றங்கள் சிறுநீரக பாதிப்பை ஏற்படுத்தக்கூடும்.

நாள்பட ஆன்டிபயாட்டிக் மருந்துகள் செயல்படாமல் போவதோடு அந்த வகை நுண்ணுயிர்களுக்கு ஆன்டிபயாட்டிக் ரெசிஸ்டன்ஸ் ஏற்பட காரணமாக அமைந்துவிடும். இதனால் மிக அவசியமாக தேவைப்படும் சமயத்தில் ஆன்டிபயாட்டிக் மருந்துகள் கை கொடுக்காமல் போய்விடுவதால் நோயாளிகளின் உயிருக்கே கூட ஆபத்து ஏற்படலாம்.

திரவ மருந்துகள், ஆன்டிபயாட்டிக் மருந்துகள், இன்சுலின் ஊசி மருந்து, நைட்ரோ கிளசரின் மருந்து, குழந்தைகளுக்கான சிரப்-கள், பொடியாக தயாரிக்கப்பட்டு திரவமாக கலந்து தரும் மருந்துகள், சொட்டு மருந்துகள், கண் சொட்டு மருந்து, காது சொட்டு மருந்து எளிதில் கேட்டு விடும் என்பதால் காலாவதி தேதியை பார்த்தே பயன்படுத்த வேண்டும்.

ஈரப்பதம், தட்வெப்பம், காற்று போன்ற காரணிகளால் கெட்டுப்போக அதிக வாய்ப்பு இருப்பதால் மருந்துகளை வெயிலில் படாமல் உலர்வான சூழலில் பாதுகாப்பதே மற்றும் காலாவதி தேதியை பார்த்துவிட்டு பயன்படுத்துவதே தேவையற்ற உடல் உபாதைகளில் இருந்து காப்பாற்றும் என்பதே மருத்துவர்களின் கருத்து.