மத்திய பட்ஜெட் 2023-24 நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்களால் பிப்ரவரி 1-ஆம் தேதி காலை 11 மணியளவில் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் இருந்து பட்ஜெட் டிஜிட்டல் வடிவத்தில் தாக்கல் செய்யப்படும் நிலையில் நடபாண்டிலும் டிஜிட்டல் வடிவில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருக்கிறது. இந்நிலையில் மத்திய நிதி அமைச்சரின் பட்ஜெட் டிஜிட்டல் வடிவ பேச்சு மற்றும் பட்ஜெட்டில் இடம்பெறும் முக்கிய அறிவிப்புகள், ஆவணங்கள் போன்ற விவரங்களை பொதுமக்கள் தெரிந்து கொள்ள மத்திய அரசு யூனியன் பட்ஜெட் என்ற செயலியை அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த செயலியில் பட்ஜெட் தொடர்பான அனைத்து விதமான ஆவணங்கள் மற்றும் அறிவிப்புகள் இடம்பெறும் என்பதால் சாதாரண மக்கள் தாங்கள் வைத்திருக்கும் ஆண்ட்ராய்டு போனில் ப்ளே ஸ்டோரில் சென்று யூனியன் பட்ஜெட் என்ற செயலியை பதிவிறக்கம் செய்து கொண்டு உங்களுக்கு தேவையான விவரங்களை பார்த்துக் கொள்ளலாம். இந்த பட்ஜெட் பிரதமர் மோடி தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் கடைசி முழுமையான பட்ஜெட் ஆகும்.

ஏனெனில் 2024-ம் ஆண்டு பொதுத் தேர்தல் நடைபெற இருப்பதால், அடுத்ததாக இடைக்கால பட்ஜெட் மட்டுமே தாக்கல் செய்யப்படும். ஆகவே இது தான் கடைசி முழுமையான பட்ஜெட் ஆக இருக்கும். மேலும் பட்ஜெட் மீது சாதாரண மக்கள் முதல் தொழில் துறையில் இருப்பவர்கள் வரை பலருக்கும் பலவிதமான எதிர்பார்ப்புகள் இருப்பதால் பட்ஜெட் தொடர்பான அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்ள தங்கள் மொபைலில் யூனியன் பட்ஜெட் என்ற செயலியை அனைவரும் பதிவிறக்கம் செய்து வைத்து கொள்ளலாம்.