நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, எதிரணியில் இருக்கின்ற சில கட்சிகளுக்கு நாட்டை விட அவர்களுடைய கட்சிகள் தான் முக்கியம், நாட்டை விட அவர்கள்  கட்சிகள் பெரியது என்ற எண்ணம் ஏற்பட்டு விட்டது.  உங்களுக்கு ஏழையின் பசி,  அதைப்பற்றி கவலை இல்லை. ஆட்சி கட்டிலில் அமர வேண்டும் என்ற உங்களுடைய பசி மட்டும்தான் உங்களுக்கு நினைவில் இருக்கிறது. நாட்டின் இளைஞர்களின் எதிர்காலத்தை பற்றி உங்களுக்கு கவலை இல்லை.

உங்களுக்கு உங்களுடைய அரசியல் எதிர்காலம் பற்றி தான் கவலை. மதிப்பிற்குரிய சபாநாயகர் அவர்களே…  ஒரு நாள் கூட இவர்கள் சபையே நடக்கவிடவில்லை.. ஏன் ? நீங்கள் பொய்யானவர்கள்,  இந்த நம்பிக்கை இல்லா தீர்மானமும் ஒரு பொய்யான தீர்மானம்.  இங்கே பேசுவதற்காக….  என்னை அழைப்பதற்காக கொண்டுவரப்பட்ட ஒரு தீர்மானம். இந்த விவாதத்தில் கூட நீங்கள் என்னென்னவெல்லாம் பேசுனீர்கள்…

சபாநாயகர் அவர்களே…  இதிலே மகிழ்ச்சிக்குரிய விஷயம் என்னவென்றால் ? எதிரணி விளையாட்டை ஆரம்பித்தது.  ஆனால் சிக்ஸர்களும் -பவுண்டரிகளும் இந்த பக்கத்தில் இருந்து வந்தது. நம்பிக்கை இல்லா தீர்மானத்தில் அவர்கள் நோபல் வீசிக்கொண்டிருந்தார்கள்.  நான்  எதிர்க்கட்சி உறுப்பினர்களிடம் கேட்க விரும்புவது  என்னவென்றால் ?  கொஞ்சம் தயார் செய்து கொண்டு ஏன் வரக்கூடாது. நான் 2018-ல் சொன்னேன் 2023-இல்  நீங்கள் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வருவீர்கள் என்று…. நீங்கள் கொஞ்சம் தயாராக வந்திருக்கலாம். ஏன் இதே போன்று ஒரு வேலை செய்கிறீர்கள் என தெரிவித்தார்.