நாடாளுமன்றத்தில் பேசிய பிரதமர் மோடி, இன்று நான் உங்களிடம் பார்க்கிறேன். 2024 தேர்தலில் பிஜேபியும் –  NDAயும் பழைய சாதனைகளை எல்லாம் முறியடித்து,  அதிக எண்ணிக்கையில் வெற்றி பெற்று வருவார்கள் என்று நீங்கள் முடிவு செய்து விட்டீர்கள் என்பதை பார்க்கிறேன். பல்வேறு விஷயங்கள் பற்றி மூன்று நாட்களாக இங்கே விவாதங்கள் நடந்தது.

இந்த கூட்டத்தொடர் தொடங்கும் அந்த முதல் நாளில் இருந்தே எதிர்க்கட்சிகள் இதேபோன்று மிகவும் கவனத்தோடு இத்தகைய விவாதங்கள் செய்திருக்கலாம். நாங்கள் இந்த கூட்டத்தில் ஜன் விஷ்வாஸ் சட்டம்,  மீடியேஷன் சட்டம், ஆதிவாசிகள் பற்றிய சட்டம்,  பிசிகல் டேட்டா ப்ரொடெக்சன் சட்டம், தேசிய ஆராய்ச்சி நிறுவன சட்டம் போன்ற பல சட்ட முன்னுரைவுகளை நாங்கள் கொண்டு வந்தோம்.

நம்முடைய மீனவர்களுடைய உரிமை பற்றிய சட்டம். இதைப்பற்றி  கேரளாவுக்கு அதிக ஆர்வம் இருந்திருக்க வேண்டும். அவர்கள் இந்த சட்ட முன்வரைவு பற்றிய விவாதத்திற்கு அதிகம் பங்கு எடுத்திருக்க வேண்டும். ஆனால்  அரசியல் அவர்களை குருடர்கள் ஆக்கிவிட்டது.

இந்த விவாதத்தில் அவர்கள் பங்கேற்கவில்லை. மீனவர்களை பற்றி அவர்களுக்கு அக்கறை இல்லை. ஆய்வு பற்றிய இந்த சட்ட முன்வரைவு அறிவியல் உலகில் இந்தியாவை உச்ச நிலைக்கு கொண்டு செல்லக்கூடிய ஒரு சட்ட முன்வரைவு, டிஜிட்டல் டேட்டா ப்ரொடக்சன் பில் இந்திய இளைஞர்களின் உழைப்பை காப்பாற்றுகின்ற ஒரு சட்ட முன் வரைவு..

வருகின்ற காலம் தொழில்நுட்பத்தால் ஓட்டப்படுகின்ற ஒரு காலம். டேட்டா என்பது இரண்டாவது தங்கம், இரண்டாவது பெட்ரோலியம் என்று கருதப்படுகிறது. ஆனால் அரசியல் உங்களுக்கு முக்கியமாக போய்விட்டது. இந்த சட்ட வரைவு முக்கியமாக தெரியவில்லை.

கிராமத்திற்காக… பழங்குடியினருக்காக… இளைஞர்களுக்காக… அவர்களுடைய எதிர்காலத்திற்காக பல சட்ட முன்னுரைகள் கொண்டுவரப்பட்டன. ஆனால் இந்த சட்ட முன்வரைவில்  இவர்களுக்கு எந்த விதமான ஆர்வமும் இல்லை. நாடு… நாட்டு மக்களின் எந்த வேலைக்காக இவர்கள் இங்கு வந்தார்களோ,  அந்த மக்களுக்கு நம்பிக்கை துரோகம் செய்திருக்கிறார்கள் என தெரிவித்தார்.