மணிப்பூர் விவகாரத்தில் நாடாளுமன்றத்தில் பேசிய பிரதம ர் நரேந்திர மோடி, நாட்டின் மக்கள் எங்களுடைய அரசின் அடிக்கடி நம்பிக்கை தெரிவித்து  தெரிவித்து இருக்கிறார்கள். இந்த நாட்டின் கோடி கோடி மக்களுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன். சபாநாயகர் அவர்களே….  கடவுள் மிகவும் கருணை மிகுந்தவர் என்று சொல்வார்கள். யாரோ ஒருவரின் மூலமாக தன்னுடைய விருப்பத்தை நிறைவேற்றிக் கொள்வார் என்று சொல்வார்கள்.

நான் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை இறைவனின் ஆசிர்வாதமாக கருதுகிறேன். அவருடைய அருளாலே எதிர்க்கட்சியினர் இந்த நம்பிக்கை இல்லா தீர்மானத்தை கொண்டு வந்திருக்கிறார்கள். 2018 கூட இறைவனின் அருளாலே எதிர்க்கட்சியினர் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டு வந்தனர். அப்போது கூட நான் சொன்னேன்…

இந்த நம்பிக்கையில்லா தீர்மானம் எங்களுடைய வலிமையை,  வலுவை சோதிக்கின்ற டெஸ்ட் இல்லை என்று சொன்னேன். இது எதிர்க்கட்சியின் வலிமையை  தீர்மானிக்கின்ற சோதனை என்று சொன்னேன். தேர்தல் நடந்த போது எதிர்க்கட்சி எத்தனை ஓட்டுகள் இருந்தனவோ அத்தனை ஓட்டுகள் கூட அவர்களால் வாங்க முடியவில்லை.

அது மட்டும் அல்ல,  நாங்கள்  மக்களிடத்தில் சென்றபோது மக்களும் மிகுந்த வலிமையோடு…. இவர்கள் மீது நம்பிக்கை இல்லை என்று  அறிவித்தனர். தேர்தலில் NDA  கூட்டணிக்கும் அதிக இடங்கள் கிடைத்தன. பாரதிய ஜனதா பார்ட்டிக்கும் அதிக இடங்கள் கிடைத்தன.அதாவது ஒருவகையில் எதிர்க்கட்சி கூட்டணியின் நம்பிக்கையில்லா தீர்மானம் ஒரு நல்ல சகுனமாக ஆகிவிடுகிறது என தெரிவித்தார்.