அதிமுக சார்பில் நடந்த பொதுக்கூட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜீ, தலைவரு கட்சியிலேயே சேரல…. திமுகவில் சேரல…. மக்களுடைய நிலையை சொல்றாரு பாருங்க….  அவருடைய படத்தில் ஒரு பாடல் 1953இல் வருது‘மலைக் கள்ளன்” எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே…. இன்னைக்கு  ஏமாத்துறாங்க பாருங்க….  இவங்க அப்பா  ஏமாத்துனா…. இப்ப மகள் ஏமாத்துறாரு….. இனி பேரன் ஏமாற்றுவார்….. எத்தனை காலம் தான் ஏமாற்றுவார் இந்த நாட்டிலே….  இன்னும் எத்தனை காலம்தான் ஏமாற்றுவார் சொந்த நாட்டிலே,

நம்ம தமிழ்நாட்டிலே….  இந்த குடும்பத்தை பற்றி அன்னைக்கே பாடி இருக்காரு. சத்தியம் தவறாத உத்தமன் போல நடிக்கிறார்…..  இன்னைக்கு பாத்தா எல்லாத்திலும் கமிஷன், கரெக்ஷன் நடக்குதா ? எத்தனை ED வந்தாலும் போடா ? நாங்க பார்க்காததா ? நாங்க 2 ஜி அலைகற்றைல 1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து  திகார் ஜெயிலையே பார்த்தவங்க நாங்க…

எங்கள போய் நீங்க மிரட்ட முடியுமா ? என் சகோதரி கனிமொழி 6 மாதம் ஜெயிலில் இருந்து வந்தாங்க…  எங்க கட்சியினுடைய பொதுச் செயலாளர்…. மத்திய அமைச்சராக இருந்த ஆ. ராஜா 6 மாதம் சிறையில் இருந்து,  நாங்க அவரை மீட்டு எடுத்தோம், ஜாமீன்ல கொண்டு வந்தோம்.  அப்படிப்பட்ட கட்சியப்பா, நாங்க…  1 லட்சத்து 76 ஆயிரம் கோடி கொள்ளை அடித்து, ஏப்பம் விட்ட கட்சி என்று,

சொல்லாமலே  சொல்றாங்க. அதைத்தான் தலைவர் அன்னைக்கே பாட்டு பாடியிருக்கிறார்.  சத்தியம் தவறாத உத்தமன் போல நடிக்குறாரு.  மேடையில பேசும் பொது பாருங்க… எங்க ஆட்சியை பற்றி யாராவது குறை சொல்ல முடியுமா ? சொல்லுவீங்களா ? என கூப்பிட்டு வந்த கூட்டத்தை பார்த்து கேட்குறாரு… அவுங்க எல்லாரும்  நலத்திட்டம் வாங்கணும்னு இல்லை… இல்லைன்னு சொல்லுறாங்க… என திமுகவை விமர்சனம் செய்தார்.