செய்தியாளர்களிடம் பேசிய பாஜக சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன், தமிழகத்திலே முக்கியமாக சட்டம் – ஒழுங்கு – பிரச்சினை. பெண்களுக்கு பாதுகாப்பில்லாத சூழல். புகார் அளித்தாலும் கூட,  அது பதிவு செய்து நடவடிக்கை எடுப்பதில் காலதாமதம் என்று பல்வேறு குற்றச்சாட்டுகள் இந்த மாநில அரசின் மீதாக இருக்கிறது.ஆனால் இவற்றில் எல்லாம் கவனம் செலுத்தாத மாநில அரசு,

பாரதிய ஜனதா கட்சியினுடைய தொண்டர்கள், நிர்வாகிகள்….  ஏதேனும் ஒரு சிறு பதிவை கூட சமூக ஊடகங்களில் பதிவு செய்தால் உடனடியாக வழக்கு பாய்கிறது. பாரத பிரதமர் மோடி அவர்களை எவ்வளவு கீழ் தனமாக விமர்சிக்க முடியுமோ,  அவ்வளவு கீழ்த்தனமாக விமர்சிப்பது திராவிட முன்னேற்ற கழகம். இன்றும் கூட திராவிட முன்னேற்றக் கழகத்தினுடைய பல்வேறு நிர்வாகிகள் மிக மிக கேவலமான முறையிலே சமூக ஊடகங்களில் பதிவிட்டு கொண்டிருக்கிறார்கள்.

ஆனால் எந்த நடவடிக்கையும் அவர்கள் மீது இல்லாமல்,  எங்கள் கட்சியை சார்ந்த… சாதாரணமான தொண்டர்கள்… அவர்களையெல்லாம் கூட ஒரு கருத்து போட்ட உடனே…..  அவர்களை தூக்கிட்டு போறது…. அதுவும் கரெக்டா வெள்ளிக்கிழமை அரெஸ்ட் பண்றது…. இல்ல விடியற்காலையில் போயிட்டு…. யாருக்கும் தெரியாம அரெஸ்ட் பண்ணிட்டு போறது…  இந்த மாதிரி மிக மிக ஒரு கீழ்த்தனமான சூழ்நிலையில் நடந்துட்டு இருக்காங்க…. இதை பாரதிய ஜனதா கட்சி சார்பில் நாங்கள் கண்டிக்கிறோம். அரசினுடைய இந்த ஒரு தலைபட்சமான நடவடிக்கை என்பதை நாங்கள் எதிர்க்கிறோம் என தெரிவித்தார்.