செய்தியாளர்களை சந்தித்த திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ் பாரதி, பாஜக  ஆட்சிக்கு வருவதற்கு முன்பாக 15 லட்சம் ரூபாய் போடுவேன்னு சொன்னாரே,  போட்டாரா ? இரண்டு கோடி பேருக்கு வேலை கொடுத்தாரா ? திராவிட முன்னேற்ற கழகம் தளபதி மு.க ஸ்டாலின் அவர்கள் ஒரு ஆட்சி பொறுப்பை ஏற்றவுடன் நீட் விலக்குக்கு உரிய நடவடிக்கை எடுத்தார்.  எதையும்  தெளிவாக செய்ய வேண்டும்.

போன ஆட்சியிலே நீதி மன்றத்தில் சரியாக வாதாடிய காரணத்தினால் தான் நீட் தேர்வால் நுழைய முடியவில்லை. எப்படி ஜெயலலிதா இருக்கிற வரை நீட் தேர்வு தமிழ்நாட்டிற்குள் நுழையவில்லை…. கலைஞர் இருக்கிற வரைக்கும் தடுத்தாரா ? இல்லையா ? ஆனால்  இந்த நான்கு ஆண்டு காலத்தில் இவர்கள் கையாலாகாதவர்கள்….. நீட்  கைநழுவி போய்விட்ட காரணத்தினாலே அப்படி ஒரு நிலை வந்து விடக்கூடாது என்பதற்காகத்தான்,

தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் ஆட்சி அமைந்த உடன் நீதியரசர் ஏகே ராஜன் தலைமையிலே ஒரு குழுவை அமைத்து…  அந்த குழுவினுடைய பரிந்துரைகளை எல்லாம்  சட்டமன்றத்திலே ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றி….  குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்து….  சில நாட்கள் கவர்னர் அனுப்பாமல் அதை இங்கே வைத்திருந்தார்…

நாடாளுமன்றத்திலே திமுக உறுப்பினர்கள் குரல் எழுப்பிய பிறகு,  குடியரசு தலைவருக்கு அனுப்பப்பட்டிருக்கிறது. குடியரசுத் தலைவரின் உடைய மாளிகையில் இருக்கிறதுக்கு மேலும் அழுத்தம் கொடுப்பதற்காகத்தான் இந்த கையெழுத்து இயக்கம். அது மட்டுமல்ல நாளொரு மேனியும் பொழுதொரு வண்ணமும் இந்த நீட்டுக்கு  எதிரான போராட்டத்திற்கு ஆதரவு பெருகி வருகிறது என தெரிவித்தார்.