தளபதி விஜய் நடித்த “வாரிசு”, அஜித் நடித்த “துணிவு” ஆகிய 2 திரைப்படங்களும் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு ஜனவரி 11ஆம் தேதி ரிலீஸ் ஆகியது. தமிழகம் மற்றும் வெளிநாடுகளை பொறுத்தவரை 2 படங்களுமே லாபகரமான திரைப்படங்களாக அமைந்துள்ளதாக கூறுகின்றனர். வெளிமாநிலங்களில் துணிவு திரைப்படத்தின் வசூல் சரியாக அமையவில்லை. அதே நேரம் வாரிசு படம் நன்றாக வசூலித்துள்ளது. 2 திரைப்படங்களும் தற்போது கடைசி கட்ட ஓட்ட நாட்களில் இருக்கிறது. இந்த வாரம் பிப்ரவரி 3-ஆம் தேதி பல்வேறு புது படங்கள் வெளிவரவுள்ளது.

ஆகவே வாரிசு, துணிவு ஆகிய படங்களை வியாழக்கிழமையுடன்(நாளை) பெரும்பாலான தியேட்டர்களில் நிறுத்த இருக்கின்றனர். எனினும் சென்னை, கோவை ஆகிய சில மாநகரங்களில் மட்டும் சில தியேட்டர்களில் ஓட வாய்ப்புள்ளது. இந்த வாரத்துடன் இப்படங்களுக்கான உண்மையான வசூல் நிலவரம் என்ன என்பது சம்பந்தப்பட்டவர்களுக்கு தெரிந்துவிடும்.