ஈரோடு கிழக்கு சட்டப் பேரவை தொகுதிக்கு வருகிற பிப்,.27 ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெற இருக்கிறது. அதில் தி.மு.க கூட்டணியில் அங்கம் வகிக்கும் காங்கிரஸ், அதிமுக, நாம் தமிழர் கட்சி, உள்பட சில சிறிய கட்சிகளும், சாதி கட்சிகளும் மற்றும் சுயேச்சைகள் போட்டியிடுகின்றனர். இடைத்தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ள நிலையில், அனைத்து கட்சியினரும் ஈரோட்டில் குவிந்துள்ளனர்.

இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலில் இபிஎஸ் தரப்பு டெபாசிட் வாங்குமா? என்று பார்க்கலாம் என ஓபிஎஸ் ஆதரவாளர் புகழேந்தி சவால் விடுத்துள்ளார். இது பற்றி செய்தியாளர்களிடம் பேசிய அவர், இடைத்தேர்தல் முடிவு வரும்போது டெபாசிட்டை கூட வாங்க முடியாவிட்டால், அதிமுகவை OPS-யிடம் ஒப்படைத்துவிட்டு அவரது காலில் விழவேண்டும். பாஜக மீது மரியாதை வைத்திருக்கிறோம். அதற்காக அண்ணாமலை சொல்வதையெல்லாம் ஏற்க முடியாது என்றார்.