ஈரோடு கிழக்கு தொகுதியில் வருகிற பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவிருக்கும் நிலையில், மார்ச் மாதம் 2-ம் தேதி வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட இருக்கிறது. இந்த தேர்தலில் திமுக கூட்டணியின் சார்பாக காங்கிரஸ் கட்சியின் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட இருக்கிறார். இதேபோன்று அமுமுக, தேமுதிக மற்றும் நாம் தமிழர் போன்ற கட்சிகளும் வேட்பாளர்களை அறிவித்துள்ளது.
ஆனால் அதிமுகவில் ஓபிஎஸ் மற்றும் இபிஎஸ் தனித்தனியாக போட்டியிட உள்ள நிலையில், பாஜக ஆதரவு யாருக்கு என்று தெரியாததால் இதுவரை வேட்பாளர்களை அறிவிக்கவில்லை. இந்நிலையில் ஈரோடு கிழக்கு தொகுதியில் இன்று வேப்பமனு தாக்கல் தொடங்குகிறது. இருதயர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் இன்று காலை 11 மணி முதல் பிற்பகல் 3 மணி வரை வேட்பு மனு தாக்கல் செய்யலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.