பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் இன்று இரவு 7 மணிக்கு டெல்லியில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்திற்கு செல்கிறார். திரிபுரா, நாகலாந்தில் பாஜகவின் கூட்டணி கட்சிகள் வெற்றியை தொடர்ந்து கட்சி தலைவர்கள், தொண்டர்களை சந்தித்த பின் முக்கிய அறிவிப்பை பிரதமர் வெளியிட உள்ளார். இரு மாநிலங்களில் அடுத்த முதல்வர் யார் என்பது குறித்த அறிவிப்பாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.