தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி மூலமாக ஊழியர்களுக்கு ஓய்வூதிய தொகை பலன்கள் தொடர்ந்து வழங்கப்பட்டு வருகின்றது. தற்போது பயனர்களுக்கு முக்கியமான அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதாவது EPFO கணக்கின் கீழ் உள் நுழைவதற்கு தங்களின் கடவுச்சொல்லை புதுப்பிக்க வேண்டும். இந்த நடவடிக்கையானது அனைவரும் ஆதார் எண்ணுடன் மொபைல் நம்பரை இணைக்க வேண்டும் என்பதை சரிபார்க்க மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது மட்டுமல்லாமல் கடவுச்சொல் பத்து வருடங்களாக புதுப்பிக்கப்படாமல் இருந்தால் இந்த அப்டேட்டை உடனே செய்யுமாறு EPFO அறிவுறுத்தியுள்ளது. அதேசமயம் தங்களின் கணக்கின் கடவுச்சொல்லை புதுப்பித்த ஆறு மணி நேரத்திற்கு பிறகு தான் உங்களின் E-Passbook பார்க்க முடியும்.

இதற்கு முதலில் https://unifiedportal-mem.epfindia.gov.in/memberinterface/ என்ற இணையதள பக்கத்திற்குச் சென்று உங்களின் பெயர் மற்றும் கடவுச்சொல்லை உள்ளிட வேண்டும். அதன் பிறகு புதிய கடவுச்சொல்லை உருவாக்கி Get Aadhaar OTP என்பதை கிளிக் செய்ய வேண்டும். தற்போது பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு வரும் ஓடிபி என்னை உள்ளிட்டால் தங்களின் புதிய கடவுச்சொல் புதுப்பிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.