இந்தியாவில் கடந்த 15 மாதங்களாக பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் எந்தவித மாற்றமும் இல்லை. கடந்த வருடம் ஜூன் மாதம் 116 டாலராக இருந்த ஒரு பேரல் கச்சா எண்ணெயின் விலை 82 டாலராக குறைந்தது. இந்நிலையில் கூடிய விரைவில் பெட்ரோல் விலை குறையும் என மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்துள்ளார். இதுகுறித்து வாரணாசியில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கூறியதாவது, இதுவரை ஏற்பட்ட இழப்புகளை சரி செய்து கொள்ளும் பணியை எண்ணெய் நிறுவனங்கள் மேற்கொள்ள வேண்டும்.

சர்வதேச கச்சா எண்ணையின் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவிலும் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றம் வர வேண்டும். அதன்பிறகு கச்சா எண்ணெயின் விலை உயர்ந்த போதும் இந்தியாவில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையை உயர்த்தாமல் எண்ணெய் நிறுவனங்கள் பொறுப்புடன் செயல்பட்டது. மேலும் கச்சா எண்ணெயின் விலை உயர்ந்ததால் பெட்ரோல், டீசல் விலை உயரக்கூடாது என்பதற்காக மத்திய அரசு கலால் வரியை இரண்டு முறை குறைத்ததாகவும் கூறினார்.