காங்கிரஸ் கட்சியின் எம்.பி ராகுல் காந்தி தேசிய அளவில் கட்சியை பலப்படுத்தவும், தொண்டர்களை உற்சாகமடைய செய்யவும் பாரத் ஜோடா என்ற பெயரில் இந்திய ஒற்றுமை நடைப்பயணத்தை மேற்கொண்டுள்ளார். கடந்த வருடம் செப்டம்பர் மாதம் கன்னியாகுமரியில் ராகுல் காந்தியின் நடைபயணம் காஷ்மீரில் முடிவடையும். இந்நிலையில் ஒற்றுமை பயணத்தில் இருக்கும் ராகுல் காந்தியின் பழைய நேர்காணல் வீடியோ ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

அதாவது ராஜஸ்தானில் நடைபயணம் மேற்கொண்டிருந்த போது ராகுல் காந்தி தன்னுடைய முதல் சம்பளம் குறித்து பேசி இருந்தார். இது குறித்து ராகுல் கூறியதாவது, நான் முதன் முதலில் லண்டனில் வேலையில் சேர்ந்த போது 3000 பவுண்டுகள் (இந்திய மதிப்பில் 3 லட்சம் பவுண்டுகள்) சம்பளமாக பெற்றேன். அப்போது எனக்கு வயது 25 தான். மேலும் அதைத்தான் என் வாழ்நாளில் நான் அதிக சம்பளம் என்று உணர்ந்தேன் என்று கூறியுள்ளார்.