குஜராத் மாநிலத்தில் உள்ள நவ்சாரி மாவட்டத்தில் பக்தாஷ்ரம் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இந்த பள்ளியின் சார்பாக கணித டீச்சர் தேவை என்று விளம்பரம் கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பள்ளியில் கணித டீச்சராக பணிபுரிய விரும்புபவர்கள் இந்த தொலைபேசி எண்ணுக்கு தொடர்பு கொள்ளலாம் என ஒரு வித்தியாசமான விளம்பரத்தை கொடுத்துள்ளனர். அதாவது தொலைபேசி நம்பருக்கு பதிலாக ஒரு கணித ஃபார்முலாவை கொடுத்துள்ளனர்.

அந்த கணித பார்முலாவில் தொலைபேசி நம்பர் உள்ள நிலையில் கணித டீச்சர்கள் அந்த தொலைபேசி நம்பரை ஃபார்முலாவில் இருந்து கண்டுபிடித்து வேலையில் சேர வேண்டும் என்பதற்காக தற்போது வித்தியாசமான ஒரு விளம்பரத்தை கொடுத்துள்ளனர்.

பொதுவாக ஆசிரியர்கள் தான் மாணவர்களுக்கு டெஸ்ட் வைப்பார்கள். ஆனால் ஒரு பள்ளி டீச்சருக்கு டெஸ்ட் வைத்து வேலைக்கு எடுக்கிறது. மேலும் இந்த விளம்பரம் தற்போது சோசியல் மீடியாவில் வைரலாகி வரும் நிலையில் நெட்டிசன்கள் பலரும் பாராட்டுகளை தெரிவித்து வருவதோடு தங்களுடைய பல்வேறு கருத்துக்களையும் தெரிவித்து வருகிறார்கள்.