உணவக பில்லில் பல்வேறு வகையான வரிகளும் சேர்க்கப்படுகிறது. அந்த வகையில் GST-யும் இதில் சேர்க்கப்பட்டு உள்ளது. எனினும் அனைத்து உணவகங்களும் பில்லில் GST-ஐ சேர்க்க முடியாது என்பது உங்களுக்கு தெரியுமா?  இதன் காரணமாக GST-க்கு கூடுதலான கட்டணம் செலுத்தவேண்டியதில்லை. ஜிஎஸ்டி Composition Scheme கீழ் சேர்க்கப்பட்டிருக்கும் வணிகர்கள் GST செலுத்தவேண்டும். இது வழக்கமான GST-ஐ விட குறைவு.

அரசாங்கத்தின் GST கலவை திட்டத்தின் கீழ் உள்ள உணவகங்கள், பில்லில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ஜிஎஸ்டியை வசூலிக்க இயலாது. GST கலவை திட்டத்தை எடுத்துக்கொண்டிருக்கும் உணவகத்தின் பில், ஜிஎஸ்டி விதிக்கப்படும் உணவகத்தின் பில்லில் இருந்து வேறுபடும். கலவை வரி விதிக்கும் நபர், சப்ளைகளுக்கு வரி வசூலிக்க தகுதியற்றவர் (Composition taxable person, not eligible to collect tax on supplies) என்று பில்லில் குறிப்பிடப்பட்டு இருந்தால் நீங்கள் GST செலுத்தவேண்டியதில்லை.