
இந்திய ரயில்வே கேட்டரிங் மற்றும் டூரிசம் கார்ப்பரேஷன் (IRCTC) மக்களுக்கு ஒரு முக்கிய அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. அதாவது, “irctcconnect.apk” என்ற ஆண்ட்ராய்டு செயலியை பதிவிறக்க வேண்டாம் என IRCTC எச்சரித்துள்ளது. வாட்ஸ்அப், டெலிகிராம் உள்ளிட்ட பிரபலமான தளங்களில் இது போன்ற செயலிகளை பதிவிறக்க கோரி செய்திகள் அனுப்பப்படுகிறது.
இந்த apk உங்களது மொபைலுக்கு தீங்குவிளைவிக்கும் என IRCTC எச்சரித்து உள்ளது. செயலியின் பின்னணியிலுள்ள மோசடி நபர்கள் IRCTC அதிகாரிகள் போல நடித்து ஒரு நபரின் தனிப்பட்ட தகவல்களைப் பெற முயற்சி செய்கின்றனர். ஆகவே இந்த செயலியை டவுன்லோடு செய்வதை தவிர்க்கவேண்டும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.
மோசடி செயலி பற்றி IRCTC வெளியிட்டுள்ள அறிவிப்பில், “பிஷிங் இணையதளத்தில் ( https://irctc.creditmobile.site ) ஹோஸ்ட் செய்யப்பட்ட ஒரு தீங்குவிளைவிக்கும் ஆண்ட்ராய்டு செயலி (irctcconnect.apk) வாட்ஸ் அப், டெலிகிராம் போன்ற சில மெசேஜிங் பிளாட்ஃபார்மில் பரவுகிறது. இந்த ஆப் மொபைல் சாதனத்தினை பாதிக்கும் என எச்சரித்துள்ளது.