
செய்தியாளரிடம் பேசிய முன்னாள் அமைச்சர் ஆர்.பி உதயகுமார், திருமங்கலம் பிரதான கால்வாய் திறந்தால் தான் இந்த பகுதி முழுவதும் விவசாயத்திற்கு போதுமானதாக இருக்கும் என்கின்ற காரணத்தினாலே கடந்த காலங்களில் எல்லாம் 6 ஆயிரம் மில்லியன் கன அடியை தாண்டினாலே கள்ளந்திரி, மேலூர், திருமங்கலம் இந்த மூன்றுமே திறக்கலாம். அதை ஒரு வழக்கமாக நாம் கடைபிடித்து கொண்டு வருகின்றோம். இப்போ இருக்கக்கூடிய சூழ்நிலையில் ஏறத்தாழ 9 ஆயிரம் மில்லியன் கன அடி நமக்கு தண்ணீர் இருப்பு இருக்கின்ற காரணத்தினால்,
120 நாட்களுக்கு எந்த விதமான பற்றாக்குறையும் இல்லாமல் தண்ணீர் திறக்கலாம் என்பது விவசாயிகளுடைய கோரிக்கையாக இருக்கிறது. இன்றைக்கு கூட அறப்போராட்டம் நடத்திருக்கிறார்கள். ஆகவே கள்ளந்திரியோடு சேர்த்து மேலூர், திருமங்கல பிரதான கால்வாய்யை திறந்து வைக்க வேண்டும் என்று பொதுவான கோரிக்கை. யாருக்கு திறந்து விடனும் ? யாருக்கு திறந்து விடக்கூடாது என அரசாங்கம் முடிவு செய்வார்கள்.
திறந்து விடக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. அது விவசாயிகளுக்கு பயன்படும் என்பதை இங்கே விவசாயம் சங்கத்தின் உடைய பிரதிநிதிகளோடு நம்முடைய மாண்புமிகு எதிர்க்கட்சித் தலைவர் அவர்களின் வழிகாட்டுதலோடு இங்கு மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதேபோல தொடர்ந்து நாங்கள் இப்போது ஒவ்வொரு பகுதியாக எங்களுடைய புரட்சித் தமிழன் எடப்பாடியார் ஆணைக்கிணங்க…. கிராமங்களுக்குள் செல்லுகிற போது எல்லா பகுதிகளிலும் முதியோர் ஓய்வூதியத்தை, குறிப்பாக தகுதியுள்ள ஓய்வூதியங்கள் எல்லாம் ரத்து செய்யப்படுவதாக என்னிடத்தில் புகார் கொடுக்கின்றார்கள் உள்ளிட்ட அடுக்கடுக்கான விமர்சங்களை அரசின் மீது வைத்தார்.