சித்திரை திருநாள் அன்று பாஜக தலைமையகத்தில் திமுகவினரின் சொத்துப் பட்டியலை தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை தெரிவித்தார். திமுகவின் சொத்து மதிப்பு மற்றும் அக்கட்சியின் மூத்த தலைவர்கள் சொத்து மதிப்பு விபரங்களை வீடியோ மூலம் வெளியிட்டார். அது தொடர்பாக ஒரு வாரத்திற்குள் திமுகவினர் விளக்கமளிக்க வேண்டும். இதையடுத்து தன் தரப்பு விவரத்தை செய்தியாளர்கள் முன்னிலையில் தெரிவிப்பதாக அண்ணாமலை கூறினார்.

இந்நிலையில் சென்னையில் நடந்த ஒரு நிகழ்ச்சியில் பங்கேற்ற விளையாட்டு துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினிடம் அண்ணாமலை வெளியிட்ட திமுக Files குறித்து கேள்வி எழுப்பினர். இதற்கு உதயநிதி ஸ்டாலின் பதிலளித்ததாவது, என்னிடம் மட்டும் இத்தனை கேள்வி கேட்கிறீர்கள். இது தொடர்பாக அண்ணாமலையிடம் கேள்வி கேட்டு இருக்கலாமே என ஆதங்கதுடன் தெரிவித்தார். மேலும் கண்டிப்பாக அவர் மீது மான நஷ்ட ஈடு வழக்கு தொடருவோம்” என்று அவர் கூறினார்.