டிஸ்னி+ஹாட்ஸ்டார் நம் நாட்டில் மிகவும் பிரபலமடைந்த ஓடிடி இயங்குதளம் ஆகும். ஐபிஎல், நேரடி கிரிக்கெட், வெப் தொடர்கள் மற்றும் சமீபத்திய படங்கள் ஆகியவற்றை காரணமாக இந்த OTT தளம் எப்போதும் டிரெண்டிங்கில் இருக்கிறது. இப்போது டிஸ்னி பிளஸ் ஹாட்ஸ்டார் பயனாளர்களுக்கு ஒரு அதிர்ச்சியான செய்தி வெளியாகியுள்ளது. அதாவது, வருகிற மார்ச் 31ஆம் தேதி முதல் சந்தாதாரர்களுக்கு இந்த ஆப் HBO உள்ளடக்கத்தை வழங்கப்போவதில்லை.

இதை அந்நிறுவனமானது தன் டுவிட்டர் பக்கத்தில் உறுதிசெய்துள்ளது. இந்நிலையில் இனி Disney Plus Hotstar பயனாளர்கள் The Last of Us, Succession, Game of Thrones, House of the Dragon, The Wire, The Sopranos, Silicon Valley ஆகிய உள்ளடக்கத்தைப் பார்க்க முடியாது. டிஸ்னி+ஹாட்ஸ்டார் பிளாட்பார்மில் சமீபத்திய வெற்றிகளில் ஒன்று HBO-ன் புது தொலைக்காட்சித் தொடரான ​​தி லாஸ்ட் ஆஃப் அஸ் ஆகும்.