கூகுள் நிர்வகித்து வரக்கூடிய Android இயங்குதளம் புது பதிப்புகளை வெளியிட்டு யூஸர்களின் தேவைகளை பூர்த்தி செய்து வருகிறது. அதன்படி இன்னும் சில தினங்களில் ஆண்ட்ராய்டு இயங்குதளத்தின் புது பதிப்பை நிறுவனம் வெளியிடவுள்ளது. சென்ற மாதம் நடந்து முடிந்த கூகுளின் வருடாந்திர I/O 2023 நிகழ்வில் இது தொடர்பான தகவலை நிறுவனம் வெளியிட்டது.

அந்த வகையில் ஆண்ட்ராய்டு 14 பதிப்பில் பல்வேறு புது அம்சங்கள் வர இருப்பதாக தெரியவந்து உள்ளது. அதில் சிலவற்றை ஆப்பிள் நிறுவன ஐபோன்களில் இருக்கும் iOS இயங்குதளத்தை ஒத்திருக்கும் என தகவல்கள் வெளியாகி உள்ளது.

இதில் முக்கியமான அம்சமாக ஆப்பிள் சாதனங்களிலுள்ள பேட்டரி திறன் காட்டும் அமைப்புகள் உள்ளிட்ட சேவை கிடைக்கும் என்று கேட்ஜெட் தொழில்நுட்பங்களை உன்னிப்பாக கவனித்து வரும் டிப்ஸ்டர் மிஷால் ரகுமான் தெரிவித்துள்ளார். இதை கூகுள் சோதனை செய்து வருவதாகவும் அவர் தெரிவித்து உள்ளார். பேட்டரி மேனேஜர் எனும் பெயரில் இதன் தரவுகள் காணப்பட்டதாக அவர் உறுதிசெய்து உள்ளார். அவர் அண்மையில் வாங்கிய கூகுள் பிக்சல் 7 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஆன்ட்ராய்டு 14 நிறுவப்பட்டு இருந்தது.