இந்த டிஜிட்டல் உலகத்தில் ஹேக்கருக்கு உங்களது வைஃபையை அணுக வாய்ப்பு கிடைத்தால், அதனுடன் இணைக்கப்பட்ட கணினிகள், ஸ்மார்ட் போன்கள் (அ) ஸ்மார்ட் ஹோம் சாதனங்கள் போன்றவற்றை ஹேக் செய்யலாம். பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால் உங்களது வைஃபையை பாதுகாக்க என்ன செய்யவேண்டும் என்பதை தற்போது அறிந்துகொள்ளலாம். உங்களது வீட்டில் ரூட்டரை அமைத்ததும், இணைய இணைப்பில் பிரச்சனை ஏற்படும் சமயத்தில் மட்டுமே அதை சரிபார்க்க நீங்கள் திரும்பி பார்ப்பீர்கள்.

எனினும் உங்களது வீட்டு நெட்வொர்க்கிலுள்ள பாதுகாப்பு அமைப்புகளை நீங்கள் தவறாமல் சரிபார்க்க வேண்டும் என்பதை கவனத்தில்கொள்ள வேண்டும். இதனிடையே ஹோம் ரூட்டரின் செட் அப் முடிந்தவுடன் முன்னமைக்கப்பட்ட வைஃபை கடவுச் சொற்கள் பாதுகாப்பற்றதாகவும், எளிதில் யூகிக்கக்கூடியதாகவும் உள்ளதால் உடனே வைஃபை பாஸ்வேர்டை மாற்றுங்கள். நீங்கள் வைத்துள்ள கடவுச் சொல் சற்று சிக்கலானதாகவும், எளிதாக கண்டுபிடிக்க முடியாததாகவும் இருக்கவேண்டும்.

அதேபோல் SSID எனும் புது நெட்வொர்க் பெயரில் சேவை வழங்குபவர் கொடுக்கும் இயல்பு நிலை பெயரை யாராலும் அறியப்படலாம் என்பதால் பெயர் மாற்றம் தேவை. உங்களது பெயர், இருப்பிடம் (அ) மற்ற விபரங்கள் எதுவும் SSID தகவலில் இல்லாமல் இருப்பதை உறுதிப்படுத்த வேண்டும். அதோடு தொலைநிலை அணுகலை (Remote access ) முடக்கவும். ஹார்ட் டிரைவ்களை இணையத்துடன் இணைக்க அனுமதிக்கும் ரவுட்டர்கள் இருக்கிறது.

அத்துடன் இது தாக்குதலின் புள்ளியாக இருக்கலாம். இது தவிர தேவையில்லாத நேரத்தில் வைஃபையை ஆஃப் செய்யலாம். வேலை முடிந்ததும் இணைய இணைப்பு தேவையில்லை (அ) இரவில் தூங்கும்போது (அ) நீங்கள் ஒரு பயணத்திற்கு வெளியே செல்லும் போது வைஃபையை முடக்கினால் உங்கள் சாதனம் இணைக்கப்படாது மற்றும் இணைக்கப்படாத சாதனங்களை ஹேக்கர்கள் தாக்க முடியாது.