வாட்ஸ்அப் செயலியில் நாளுக்கு நாள் அதனுடைய அம்சங்கள் மேம்பாடு செய்யப்பட்டு வருவதால் பில்லியன் கணக்கிற்கும் மேலான வாடிக்கையாளர்கள் WhatsApp செயலியை பயன்படுத்தி வருகின்றனர். அதோடு வாட்ஸ்அப் பயனாளர்களின் விருப்பத்திற்கு மற்றும் பயன்பாட்டிற்கு ஏதுவாக அவ்வப்போது பல அப்டேட்டுகள் வெளியிடப்பட்டு வருக்கிறது.

இந்த நிலையில் GIF, ஸ்டிக்கர் மற்றும் அவதார் போன்ற பிரிவுகள் WhatsApp பக்கத்தின் மேல் பக்கத்திற்கு மாற்றப்பட்டிருக்கிறது. இந்த புது அப்டேட் சில மெட்டா சோதனையாளர்களுக்கு மட்டும் வழங்கப்பட்டிருப்பதாகவும் இன்னும் சில வாரங்களில் அதிகமான வாட்ஸ்அப் பயனர்களுக்கும் வெளியாகும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு வாட்ஸ்அப் செயலில் இருந்து மற்றொருவருக்கு புகைப்படம் அனுப்பும் போது அந்த புகைப்படத்தில் சில சுருக்கம் பயன்படுத்தப்பட்டு போட்டோ அசல் தரத்தில் அனுப்பப்படுவதில்லை.

எனினும் தற்போது அனைத்து புகைப்படங்களும் ஒருவரிடம் இருந்து மற்றொருவருக்கு அனுப்பும் போது அதே நிலையான தரத்தில் அனுப்பும்படியாக அப்டேட் வழங்கப்பட்டிருக்கிறது. அதன்படி, வாட்ஸ்அப் செயலியின் வாயிலாக சிறந்த தரத்துடன் கூடிய புகைப்படத்தை அனுப்ப விரும்பும் பயனாளர்கள் ஒவ்வொரு முறையும் HD விருப்பத்தை தேர்ந்தெடுத்து அதற்குரிய புகைப்படங்களை பயனாளர்களுடன் பகிர்ந்துக்கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டு உள்ளது.